Thursday, April 21, 2011

வாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

இன்றுதான் மாமேதை திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் என்று கிங் விஸ்வாவின் இந்த பதிவின் மூலம் அறிந்தவுடன் நாமும் ஏதாவது பதிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் விளைவே இந்த சிறிய, அவசர பதிவு. வாண்டுமாமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி அலுவலகத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ் படங்களுக்கு காந்தன் அவர்களும், ஹிந்தி படங்களுக்கு ரா.வீ  அவர்களும் விமர்சனம் எழுதுவார்கள். நடுவில் சில ஆங்கில படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் வாண்டுமாமா அவர்களே கௌசிகன் என்ற பெயரில் விமர்சனம் எழுதுவதுண்டு. அப்படி அவர் எழுதிய சில விமர்சனங்கள் இங்கே உங்களின் பார்வைக்கு.

என்னிடம் பழைய கல்கி இதழ்கள் பல உள்ளன. ஆனால் தினமணிக்கதிர் இதழ்கள் சிலவே உள்ளன. ஒரு காலத்தில் தினமணிக்கதிர் இதழில் வாண்டுமாமா அவர்கள் மட்டுமே திரை விமர்சனம் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நா.பா அவர்களுக்கும் ஒரு பனிப்போர் துவங்கிய கால கட்டத்தில் நா.பா முதலில் கை வைத்து திரை விமர்சனம் பகுதியில் தான். இந்த சினிமா விமர்சனம் பகுதியை இனிமேல் நீங்கள் செய்ய வேண்டாம் என்று அவர் பிரச்சினையை துவக்கினார். அது சரி, நல்ல நாளில் எதற்கு பழைய விஷயங்கள், விடுங்கள். நான் கூற வந்த மேட்டர் இதுதான் - யாரிடமாவது பழைய தினமணிக்கதிர் புத்தகங்கள் இருந்தால் அவற்றை நான் விலைக்கு வாங்கிக்கொள்ள தயார். என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவியுங்கள்.

முதலில் நாம் படிக்கப்போகும் விமர்சனம் செல்லக்கிளி என்ற மொக்கைப்படத்தை பற்றியது. இந்த படத்தை நான் பார்த்தது இல்லை. ஆனால் வாண்டுமாமா அவர்களின் விமர்சனம் மூலம் அது எத்தகைய மொக்கை படம் என்பதை விளக்கி விட்டார். கிண்டலும், நக்கலும் மேலோங்கி இருக்கும் அவரது விமர்சனம் இதோ:

கல்கி இதழில் வெளிவந்த திரு வாண்டுமாமா அவர்கள் எழுதிய திரைப்பட விமர்சனம் - செல்லக்கிளி - டோட்டல் டேமேஜ்
Kalki Magazine Vandu mama Film Reviews Tamil Film 1

சில நேரங்களில் ரா.வீழிநாதன் அவர்களுக்கு பதிலாக கௌசிகன் அவர்களே பல ஹிந்தி படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவார். ரா.வீ எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கும் கௌசிகன் அவர்கள் எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கு மலையளவு வித்தியாசம் இருக்கும். கௌசிகன் அவர்களுக்கு பெரும்பாலும் மொக்கை படங்களே சிக்கும், நல்ல படங்கள் வரும்போது ரா.வீ அதனை விமர்சனம் செய்வார். இப்படியாக மாறி, மாறி நடந்து கொண்டு இருந்தது. கௌசிகன் அவர்கள் எழுதிய ஒரு ஹிந்தி பட விமர்சனம் இங்கே:

பிடிவாதக்காரன் - ஸித்தி - ஹிந்திப்பட விமர்சனம் - கிண்டலின் உச்சம் - வாண்டுமாமாவின் முத்திரை விமர்சனம்

Kalki Magazine Vandu mama Film Reviews Hindhi Film 2

இப்படியாக வெறும் மொக்கை படங்களுக்கே விமர்சனம் எழுதி அவஸ்தை அட்டுக்கொண்டு இருந்தவருக்கு ஒரு மாறுதலுக்காக கூட மகாமொக்கை படங்களே அமைந்தன. விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்ற நிலையில் அவர் விமர்சனத்தின் அளவை குறைத்து விடுவார். ஒரு முழு பக்கத்திற்கு வரும் பட விமர்சனங்கள் இப்படியாக கால் பக்கம் கூட வராமல் இருக்கும். அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த ஹவஸ் பட விமர்சனம்.

மற்றுமொரு மொக்கை ஹிந்திப்பட விமர்சனம் - வாண்டுமாமாவின் கிரிடிகல் லுக்

Kalki Magazine Vandu mama Film Reviews Hindhi Film 1

கல்கி இதழின் மற்றுமொரு சிறப்பு அம்சம் நாடக விமர்சனங்கள். அந்த காலத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒரு நாடக விமர்சனம் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. சில வேளைகளில் அந்த விமர்சனத்தையும் கௌசிகன் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதோ ஒரு ருசிய இராமாயண நாடக விமர்சனம் - வாண்டுமாமாவின் பார்வையில்:

போங்கப்பா, படம் எல்லாமே போர், அதனால ஒரு நாடக விமர்சனம் - ருசிய ராமாயணம் - நாடக விமர்சகர்

Kalki Magazine Vandu mama Stage Play Reviews Russian Ramayana

இவை அத்துனையையும் மீறி பல பல்சுவை துணுக்குகள் இடம்பெற்று இருந்த இதழே கல்கி. இதோ ஒரு சுவையான வரலாற்று சம்பவம் கௌசிகன் அவர்கள் கைவண்ணத்தில்.

வியக்க வைக்கும் சரித்திர சம்பவங்கள்- வாண்டுமாமாவின் வியக்க வைக்கும் எழுத்தாற்றல்
Kalki Magazine vandu Mama Historical Facts

நேரமின்மை காரணமாக பல பதிவுகளை இட நினைத்தும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதற்காக இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த நாளில் பதிவிடாமல் இருக்கவும் மனமில்லை. அதற்காகவே இந்த பதிவு. விரைவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

Thursday, December 9, 2010

பொக்கிஷப் புதையல் 1

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

இன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல் என்ற கதம்பம் வெளிவரும். இதில் நகைச்சுவை, காமிக்ஸ் ஸ்டிரிப், சினிமா விளம்பரங்கள், சினிமா விமர்சனங்கள், சிரிக்க சிறந்த ஜோக்குகள், சிறப்பான பல்சுவை தோரணங்கள் என்று பலவகையான கதம்பமாக இருக்கும். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் தொடருகிறேன்.

கல்கி 1967: இந்த கதம்பம் பகுதியில் கல்கி இதழின் 1967ம் ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் இருந்து சில பல பொக்கிஷங்களை கண்டு ரசிக்கலாம். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆண்டு சிறப்பு பகுதிகளை எழுதல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.

சுதர்சனம் கார்னர்: ஓவியர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் சுதர்சனம் அவர்களை மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அவரின் ஜோக்குகள் கல்கி இதழில் வெளிவந்து நம் மனதை கொள்ளை கொண்டன. அவற்றை இனிமேல் ஒவ்வொரு வாரமும் கதம்பம் பகுதியில் வழங்கலாம் என்றிருக்கிறேன். முதல் பகுதி இதோ:

 

1967 SJ 1 1967 SJ 2 1967 SJ 3

காமிக் ஸ்டிரிப் கார்னர்:

கல்கி இதழ்களில் அந்த நாட்களில் (குமுதம் போல) பல காமிக் ஸ்ட்ரிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருந்தன. அவற்றிற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் தனியாக இருந்தது. சிறப்பான பல ஸ்ட்ரிப்புகள் வந்த காலம் அது. இதோ எனக்கு பிடித்த ஒரு ஸ்ட்ரிப்: மந்திரிகள் உலகம்.

அரசியல் கருத்துக்களை எடுத்து சொல்வதில் கல்கி இதழுக்கு நிகரே கிடையாது. குமுதமும், ஆனந்த விகடனும் சற்றே மழுப்பி எழுதுபவை. ஆனால் கல்கி அப்படி அல்ல. ஆனந்த விகடனில் கல்கி அவர்கள் இருந்த காலத்திலேயே அவரின் கருத்துக்கள் பிரபலம். ஆகையால் அவரின் சொந்த இதழில் சொல்லவே வேண்டாம்.

1967 MU 1 1967 MU 2

1967 MU 3

சினிமா விமர்சன கார்னர்:

கல்கி பத்திரிக்கையானது சினிமா விமர்சனதிர்க்கென்றே புகழ் பெற்ற பதிரிக்கையாகும். இந்த பத்திரிக்கையில் தான் தமிழ் படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் (ஒவ்வொரு வாரமும்), ஆங்கில படங்கள், கன்னட படங்கள், நாடகங்கள் என்று பல விதமான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருந்தன. அதிலும் குறிப்பாக காந்தன் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களுக்கு விமர்சனம் எழுதுவார். ஆங்கிலப்படங்களுக்கு பெரும்பாலும் ரா.வி எழுதுவார் (சிற்சில சமயங்களில் வாண்டுமாமா அவர்களும் எழுதுவது உண்டு). இப்படியாக கல்கி சினிமா விமர்சனம் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்த காலம் அது.

பல்ஜ் போர்: ஆங்கில படங்கள் சரமாரியாக வெளிவந்துக்கொண்டு இருந்த காலகட்டம் அது. சென்னையில் இருந்த அண்ணா சாலையில் இருந்த நான்கு பிரபல திரையரங்குகளிலும் ஆங்கில படங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். மக்களும் தங்களுடைய ஆதரவை ஆங்கிலப்படங்களுக்கு தந்துகொண்டிருந்த காலம் அது. அதிலும் ஜேம்ஸ் பான்ட் படங்கள் உலக அளவில் வெளிவந்து ஓரிரு ஆண்டுகள் கழித்தே இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த காலம் அது. இந்த சூழலில் பல விதமான ஆங்கிலப்படங்கள் வந்து ஓடிக்கொண்டிருந்தன.

1967 FR 1

பட்டணத்தில் பூதம்: வழக்கமாக பெயரில்லாமல் விமர்சனம் இருந்தால் அது வழக்க்கமாக விமசனம் செய்யும் நபர் இல்லாமல் வேறொருவர் செய்த விமர்சனம் என்று பொருள். அநேகமாக இந்த விமர்சனம் வாண்டுமாமா அவர்கள் எழுதியதாக கூட இருக்கலாம். யார் கண்டது? சமூக அவலங்களை சாடிய விதத்தில் இருந்தே இது வாண்டுமாமா அவர்களின் கைவண்ணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. 

1967 FR 2

டாக்டர் ஷிவாகோ:

டாக்டர் ஷிவாகோ படம் இரண்டு ஆண்டுகளாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று மக்கள் காத்திருந்தனர். உலக அளவில் இந்த படம் சிறந்த திரைப்படம் என்று பெயரெடுத்திருந்த நேரமது. ஆனால் தியேட்டரில் படம் வரவில்லை. அந்த காலத்தில் டிவிடி, இன்டர்நெட் இல்லாமல் மக்கள் பத்திரிக்கைகளையே நம்பி இருந்தனர். ஆகையால் கல்கியில் வந்த விமர்சனம் சிறப்பாக பேசப்பட்டது. படம் வந்த சில நாட்களில் (பெரும்பாலும் அதே நாளில்) இப்போதெல்லாம் படங்களை சென்னையில் பார்க்கும் நாம், அந்த காலத்தில் இருந்திருந்தால்? யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. டாக்டர் ஷிவாகோ படம் உலக அளவில் வந்துசரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த படம் வெளியானது.

1967 FR 3

சாமா ஜோக்குகள்:

சுதர்சனம் அவர்களின் ஜோக்குகளை போலவே (சொல்லப்போனால் அவரைவிட) புகழ் பெற்றவை சாமா அவர்களின் ஜோக்குகள். அந்தக் காலத்தில் ஜோக்குகளுக்கு படம் வரைபவரே நகைச்சுவை துணுக்குகளையும் எழுதினர் என்றால் அது சாதாரண விஷயமே. சாமா அவர்களின் ஜோக்குகளையும் கூட கல்கி சிறிது கவனிக்கலாம். ஆனந்தவிகடன் தனது பழைய ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை கல்கியும் கொடுக்கலாம். தனியாக இவர்களின் ஜோக்கு புத்தகங்களை வெளியிடலாம். கல்கி கவனிக்குமா?

இந்த ஜோக்கில் முதல் படத்தில் இருக்கும் அந்த போட்டோ பிடிப்பவரை சற்று உற்று நோக்குங்கள். நம்ம நடிகர் சோ ராமசாமி போல இல்லை?

SAJ 1 SAJ 2 SAJ 3

விளம்பர கார்னர்:

விளம்பரம் என்றால் பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்ல. அடுத்து வரப்போகும் தொடர்கள், சிறப்பிதழ்கள், போட்டிகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள். கல்கி வரப்போகும் தொடர்களை விளம்பரம் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக ஒரு தொடர்கதை வரப்ப்போகிறது என்றால் மூன்று நான்கி புத்தகங்களில் இருந்தே விளம்பரம் செய்வார்கள். அதுவும் இப்போது இருக்கும் இந்த அர்ஜுன் அம்மா யாரு போன்ற டீசர் விளம்பரங்கள் கல்கியில் தான் ஆரம்பித்தன என்றால் அது மிகையாகாது. இதோ ஆம் ஆண்டு வந்த சில விளம்பரங்கள்:

1967 AD 1 1967 AD 2

1967 AD 3

வாசகர்களுக்கான புதிர் கார்னர்:

வாசகர்களுக்கென்றே பலவிதமான புதிர்களும், போட்டிகளும் கல்கியில் சிறந்து விளங்கியது. குறிப்பாக போட்டோ போட்டிகள், வாழ்க்கை குறிப்பு போட்டிகள், பிரபலங்களின் சிறு வயது நினைவு குறிப்பு போட்டிகள் என்று கல்கியே போட்டிகளால் கலை கட்டிய சமயம் அது. அந்த சமயத்தில் வந்த ஒரு பகுதியே யார் தெரியுமா? என்ற போட்டோ போட்டி பகுதி. இந்த பகுதியில் ஒரு போட்டோ இருக்கும். அந்த போட்டோவில் ஒரு பிரபலத்தின் சிறு வயது போட்டோ இருக்கும், அதை வைத்து வாசகர்கள் அந்த பிரபலத்தை கண்டறிய வேண்டும். இந்த போட்டியையே நான் நமது வாசகர்களுக்கும் அளிக்கிறேன்: இந்த யார் தெரியுமா புக்தியில் இருக்கும் மூன்று பிரபலங்கள் யார்? அடுத்து வெள்ளிகிழமை அன்று நான் பதில் அளிக்கும் முன்பே பதிலை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.

YT 1A YT 2A YT 3A

ஒரே ஒரு க்ளூ: இந்த மூவரில் ஒருவர் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் சம்பந்தப்பட்டவர்.

அடுத்த வெள்ளியன்று இந்த புதிர்களுக்கு விடைகளுடன், மற்றும் பிற பொக்கிஷ புதையல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.