அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.
இன்றுதான் மாமேதை திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் என்று கிங் விஸ்வாவின் இந்த பதிவின் மூலம் அறிந்தவுடன் நாமும் ஏதாவது பதிவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அதன் விளைவே இந்த சிறிய, அவசர பதிவு. வாண்டுமாமா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். திரு வாண்டுமாமா அவர்கள் கல்கி அலுவலகத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றியது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி அவர் பணியாற்றிய காலத்தில் தமிழ் படங்களுக்கு காந்தன் அவர்களும், ஹிந்தி படங்களுக்கு ரா.வீ அவர்களும் விமர்சனம் எழுதுவார்கள். நடுவில் சில ஆங்கில படங்களுக்கும், தமிழ் படங்களுக்கும் வாண்டுமாமா அவர்களே கௌசிகன் என்ற பெயரில் விமர்சனம் எழுதுவதுண்டு. அப்படி அவர் எழுதிய சில விமர்சனங்கள் இங்கே உங்களின் பார்வைக்கு.
என்னிடம் பழைய கல்கி இதழ்கள் பல உள்ளன. ஆனால் தினமணிக்கதிர் இதழ்கள் சிலவே உள்ளன. ஒரு காலத்தில் தினமணிக்கதிர் இதழில் வாண்டுமாமா அவர்கள் மட்டுமே திரை விமர்சனம் எழுதி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் நா.பா அவர்களுக்கும் ஒரு பனிப்போர் துவங்கிய கால கட்டத்தில் நா.பா முதலில் கை வைத்து திரை விமர்சனம் பகுதியில் தான். இந்த சினிமா விமர்சனம் பகுதியை இனிமேல் நீங்கள் செய்ய வேண்டாம் என்று அவர் பிரச்சினையை துவக்கினார். அது சரி, நல்ல நாளில் எதற்கு பழைய விஷயங்கள், விடுங்கள். நான் கூற வந்த மேட்டர் இதுதான் - யாரிடமாவது பழைய தினமணிக்கதிர் புத்தகங்கள் இருந்தால் அவற்றை நான் விலைக்கு வாங்கிக்கொள்ள தயார். என்னுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தகவல் தெரிவியுங்கள்.
முதலில் நாம் படிக்கப்போகும் விமர்சனம் செல்லக்கிளி என்ற மொக்கைப்படத்தை பற்றியது. இந்த படத்தை நான் பார்த்தது இல்லை. ஆனால் வாண்டுமாமா அவர்களின் விமர்சனம் மூலம் அது எத்தகைய மொக்கை படம் என்பதை விளக்கி விட்டார். கிண்டலும், நக்கலும் மேலோங்கி இருக்கும் அவரது விமர்சனம் இதோ:
கல்கி இதழில் வெளிவந்த திரு வாண்டுமாமா அவர்கள் எழுதிய திரைப்பட விமர்சனம் - செல்லக்கிளி - டோட்டல் டேமேஜ் |
சில நேரங்களில் ரா.வீழிநாதன் அவர்களுக்கு பதிலாக கௌசிகன் அவர்களே பல ஹிந்தி படங்களை பார்த்துவிட்டு விமர்சனம் எழுதுவார். ரா.வீ எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கும் கௌசிகன் அவர்கள் எழுதும் ஹிந்தி பட விமர்சனங்களுக்கு மலையளவு வித்தியாசம் இருக்கும். கௌசிகன் அவர்களுக்கு பெரும்பாலும் மொக்கை படங்களே சிக்கும், நல்ல படங்கள் வரும்போது ரா.வீ அதனை விமர்சனம் செய்வார். இப்படியாக மாறி, மாறி நடந்து கொண்டு இருந்தது. கௌசிகன் அவர்கள் எழுதிய ஒரு ஹிந்தி பட விமர்சனம் இங்கே:
பிடிவாதக்காரன் - ஸித்தி - ஹிந்திப்பட விமர்சனம் - கிண்டலின் உச்சம் - வாண்டுமாமாவின் முத்திரை விமர்சனம் |
இப்படியாக வெறும் மொக்கை படங்களுக்கே விமர்சனம் எழுதி அவஸ்தை அட்டுக்கொண்டு இருந்தவருக்கு ஒரு மாறுதலுக்காக கூட மகாமொக்கை படங்களே அமைந்தன. விரக்தியின் உச்சகட்டத்திற்கு சென்ற நிலையில் அவர் விமர்சனத்தின் அளவை குறைத்து விடுவார். ஒரு முழு பக்கத்திற்கு வரும் பட விமர்சனங்கள் இப்படியாக கால் பக்கம் கூட வராமல் இருக்கும். அதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் இந்த ஹவஸ் பட விமர்சனம்.
மற்றுமொரு மொக்கை ஹிந்திப்பட விமர்சனம் - வாண்டுமாமாவின் கிரிடிகல் லுக் |
கல்கி இதழின் மற்றுமொரு சிறப்பு அம்சம் நாடக விமர்சனங்கள். அந்த காலத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒரு நாடக விமர்சனம் இடம்பெற்றுக்கொண்டு இருந்தது. சில வேளைகளில் அந்த விமர்சனத்தையும் கௌசிகன் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இதோ ஒரு ருசிய இராமாயண நாடக விமர்சனம் - வாண்டுமாமாவின் பார்வையில்:
போங்கப்பா, படம் எல்லாமே போர், அதனால ஒரு நாடக விமர்சனம் - ருசிய ராமாயணம் - நாடக விமர்சகர் |
இவை அத்துனையையும் மீறி பல பல்சுவை துணுக்குகள் இடம்பெற்று இருந்த இதழே கல்கி. இதோ ஒரு சுவையான வரலாற்று சம்பவம் கௌசிகன் அவர்கள் கைவண்ணத்தில்.
நேரமின்மை காரணமாக பல பதிவுகளை இட நினைத்தும் இட இயலவில்லை. மன்னிக்கவும். அதற்காக இந்த சரித்திர சிறப்பு வாய்ந்த நாளில் பதிவிடாமல் இருக்கவும் மனமில்லை. அதற்காகவே இந்த பதிவு. விரைவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.
Haiya me the 1st :))
ReplyDelete.
வாண்டுமாமா அவர்களின் திரை விமரிசனம் மிக அருமை :))
ReplyDelete.
ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் நன்றியுடன் வணங்குகிறேன். நீங்கள் வாழும்காலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்படுகிறேன். திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை கலந்த வணக்கங்கள்.:))
ReplyDelete.
அடச்சே! நமக்கு முன்னாடி சிபி வந்துட்டாரு!
ReplyDeleteபரவாயில்லை!
பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
வாண்டுமாமாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமொக்கை படங்களை விமர்ச்சனம் செய்ய கொடுத்த புண்ணிவானுக்கும் திரை விமர்ச்சனங்களையே செய்ய வேண்டாம் என தடுத்த புண்ணியவானுக்கும் தமிழ் சிறுவர் இலக்கிய உலகம் நன்றியோடு நினைத்து பார்க்கிறது. அவர்கள் இல்லையேல் சிறுவர் இலக்கியத்தின் சிற்பி வாண்டுமாமா நமக்கு கிடைத்திருக்க மாட்டார்!
அருமையான பதிவு. வாண்டுமாமா அவர்களின் உண்மையான கேரக்டரை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அவர் ஒரு ஐடியல் பேர்வழி. எல்லாமே நேர்மையாகவும், கண்ணியமாகவும் நடக்க வேண்டுமென்று விரும்புபவர் அவர்.
ReplyDeleteதொடர்ந்து பதிவிடுங்கள், ப்ளீஸ்.
//மொக்கை படங்களை விமர்ச்சனம் செய்ய கொடுத்த புண்ணிவானுக்கும் திரை விமர்ச்சனங்களையே செய்ய வேண்டாம் என தடுத்த புண்ணியவானுக்கும் தமிழ் சிறுவர் இலக்கிய உலகம் நன்றியோடு நினைத்து பார்க்கிறது. அவர்கள் இல்லையேல் சிறுவர் இலக்கியத்தின் சிற்பி வாண்டுமாமா நமக்கு கிடைத்திருக்க மாட்டார்!//
ReplyDeleteஅய்யம்பாளையம் சார் தவறாக புரிந்துகொண்டு விட்டார் என்று நினைக்கிறேன்.
கிங் விஸ்வாவின் வாண்டுமாமா பிறந்தநாள் பதிவிலிருந்து:
ReplyDelete//ஐயா, உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் நன்றியுடன் வணங்குகிறேன். நீங்கள் வாழும்காலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்படுகிறேன். திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் மரியாதை கலந்த வணக்கங்கள்.//
மீ ஆல்சோ ரிபீட்டு. இவருக்கு எப்படித்தான் நன்றி சொல்வது? நன்றி என்கிற வார்த்தைக்கு உணமியிலேயே ஒரு அர்த்தம் இருந்தால் அது இவருக்கு சொல்வதின் மூலம் முழுமையாகட்டும்.
வணக்கம்! ஜி! எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Deleteதிரு வாண்டு மாமா அவர்கள் "சிறுவர்
ReplyDeleteஇலக்கியம்" மட்டுமே! படைப்பவர் என்றே மிக நீண்ட காலங்கள் எண்ணி இருந்தேன்!!. நண்பர்கள் இட்டுள்ள பதிவுகளினால், அவர் "மாஸ்டர் ஆப ஆல் சப்ஜெக்ட்:" என்று தெரிந்து கொண்டேன் நன்றி..... அவர் வாழும் காலத்திலேயே நாமும் வாழுகிறோம் என்பதே நமக்கு பெருமைதான்
அன்புடன்,
ஹாஜா இஸ்மாயில்
சலாம் அலைக்கும் பாய் சாஹிப்! எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
Deleteஅருமை நிறைய தகவல் பொதிந்து கிடக்கின்றன... தகவல் பெட்டகம். வாழ்த்துகின்றேன்.
ReplyDelete