அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.
மரண அடி மல்லப்பா பற்றி என்னுடைய அறிமுகப்பதிவிற்கு வருகை தந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவில் நாம் ஒரு காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றி இல்லாமல் அந்த காலத்தில் வந்த சில சினிமா விளம்பரங்களை பார்க்கலாம்.
இந்த காலத்திய விளம்பரங்கள் போல இல்லாமல் அந்த காலத்தில் வந்த சினிமா விளம்பரங்கள் மிகவும் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் இருந்தன என்பதற்கு சான்றாக இந்த முதல் விளம்பரத்தை பாருங்கள். ஐம்பதுகளின் முடிவில் வந்த கல்கி இதழில் வந்த விளம்பரம் இது.
விலாவரியாக வந்த இந்த விளம்பரம் என்னுடைய கருத்தை கவர்ந்த ஒன்றாகும். இந்த விளம்பரத்தை மறுபடியும் பாருங்கள். அதில் எழுதப் பட்டு இருக்கும் வசனங்களை உற்று படியுங்கள். அற்புதமான வசனங்கள். இந்த விளம்பரத்தின் ஸ்கிரிப்ட்'ஐ எழுதியவருக்கு பாராட்டுக்கள். அதனைப் போலவே இந்த படத்தில் நடித்தவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவுமே கொடுக்கப் படவில்லை (ஒருவேளை புது முகங்களோ?).
மற்றுமொரு கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவெனில் லேடி = ஸ்திரி என்றும் ஜென்டில்மேன் = புமான் என்றும் விளிக்கப் பட்டு இருப்பது. ஸ்திரி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த புமான் என்ற வார்த்தையை நான் இப்போது தான் முதல் முறையாக கேள்விப் படுகிறேன்.
கடவுளர்களை பற்றி அந்த காலத்தில் வந்த படங்கள் அதிகம் (குறிப்பாக திருவிளையாடல் போன்ற படங்கள்). அதில் நான் இதுவரையில் கேள்விப் படாத படம் இந்த குமார சம்பவம்.
அந்த காலத்தில் எந்த ஸ்டுடியோவில் எடுக்கப் பட்டது என்று குறித்த விவரங்கள் அனைத்து விளம்பரங்களிலும் வந்து கொண்டே இருந்தது. இந்த விளம்பரமும் அதற்க்கு விதி விலக்கல்ல. இந்த விளம்பரத்தில் நட்சத்திர பட்டாளமே இருந்ததால் அவர்களைப் பற்றிய விவரமும் இருந்ததை பாருங்கள். ஜெமினி கணேசன் என்று இல்லாமல் கணேஷ் என்று இருப்பதையும் கவனியுங்கள்.
இந்த படத்தின் டைட்டில் லோகோ'வை பாருங்கள். காமிக்ஸ் கதைகளுக்கு உள்ளது போல வரையப் பட்டு இருக்கிறது. ஏனோ வைரஸ் எக்ஸ் (முத்து காமிக்ஸ் காரிகன் கதை) அட்டைப் படம் நினைவுக்கு வருகிறது.
ராணி இதழில் இந்த கதையை பற்றி வந்த விமர்சனத்தை படியுங்கள். வழமை போல சொத சொத விமர்சனம் தான்.
நாம் அனைவருக்கும் தெரிந்த பாலசந்தர் படமாகிய பாமா விஜயம் குறித்த விளம்பரம் இதோ:
இந்த விளம்பரத்தை நன்றாக பாருங்கள். போட்டோ வுடன் ஓவியர் ஒருவர் வரைந்த விளம்பரம் இது. வரைந்தவர் பெயர் தெரியவில்லை (இந்த விடயத்தில் வல்லவர் ஆகிய நண்பர் ஒருவரிடம் கேட்டு இருக்கிறேன் - பார்க்கலாம்- மேற்கொண்டு விவரங்கள் தெரிந்தால் அப்டேட் செய்கிறேன்). இந்த படத்தை பற்றிய ராணி விமர்சனம் இதோ:
ஜெமினி கணேசன் அவர்கள் புகழ் பெற்ற பிறகு வந்த படம் இது. ஆனால் அவர் பெயர் இதில் இல்லை. ஆனால் அதைப் பற்றி எல்லாம் பெரிய சம்பவம் எதுவும் நடக்க வில்லை என்றே நினைக்கிறேன். ஆனால், இப்போது என்னடாவென்றால் தசாவதாரம் படத்தில் ஐந்து நிமிடம் கூட வராத ஒரு பாத்திரத்தில் நடித்த நெப்போலியன் அவர் பெயரையும் படத்தையும் போஸ்டரில் போடா வில்லை என்று பிரச்சினை செய்கிறார். என்ன கொடுமை சார் இது?
இந்த விளம்பரத்திலும் கூட ஸ்டுடியோ பெயர் இருப்பதை பாருங்கள். இந்த படத்தின் பெயர் கூட ரைமிங் ஆக இருக்கிறது. தானா'வுக்கு தானா.
வாத்தியார் நடித்து வந்த படங்களை பற்றிய விளம்பரங்களை இட வில்லை என்றால் குற்றமாகி விடும் என்பதால் இதோ தலைவர் நடித்த இரண்டு விளம்பரங்கள்:
ஈஸ்ட்மேன் கலர் என்பது தெரியும், ஜெமினி என்பது ஸ்டுடியோ ஆகவே இருக்க வேண்டும். தலைவர் தான் புரோடியுசர் போல இருக்கிறது.
அப்போதே இப்படி எல்லாம் ரமணா விஜயகாந்த் மாதிரி விவரங்களை எல்லாம் கொடுத்து விளம்பரம் செய்து இருக்கிறார்கள். இந்த படத்தை பாத்தா பெண்கள் விவரம் இதோ: அது எப்படி சார் தியேட்டர் வாசலில் நின்று எண்ணி இருப்பார்களோ?
ஹீரோ யார், நடிகை யார் என்று கூட குறிப்பிடாத இந்த ஜீவநாடி விளம்பரத்தை பாருங்கள்.
சாந்தி தியேட்டர் டீலக்ஸ் ஏர் கண்டீஷன் என்று கூறப் பட்டு இருக்கிறதை நன்றாக கவனியுங்கள். அந்த காலத்தில் இப்படி பட்ட வசதிகள் கொண்ட தியேட்டர்கள் மிகவும் குறைவு. அதனால் தான் இப்படி எல்லாம் விளம்பரத்திலேயே குறிப்பிட வேண்டி இருந்தது.
வாத்தியார் படம் பற்றி கூறிவிட்டு சூப்பர் ஸ்டார் படம் பற்றி கூறாவிட்டால் ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதால் இதோ தலைவரின் மூன்று முகம் விளம்பரம்.
இப்போது ஒரு விடயம் புரிந்து விட்டது. ஜெமினி என்பது கலர் புராசசிங் நிலையம் ஆகும் என்பதே அது.
இந்த விளம்பரங்களில் முக்கால்வாசி எலேகன்ட் என்ற விளம்பர நிறுவனம் மூலமாக விநியோகம் செய்யப் பட்டு உள்ளது தெரிகிறது. அதைப் போலவே சில விளம்பரங்களில் அதனை டிசைன் செய்தவர் விவரமும் உள்ளதை பாருங்கள் (தீனதயாள், லக்ஷ்மி).
காமிக்ஸ் ஸ்டிரிப் பற்றிய பதிவு அடுத்த பதிவில் தொடரும்.
சிறப்பு பின்குறிப்பு:
காமிக்ஸ் பிரியன் said... லேட்டஸ்ட் நடிகர்கள் தனுஷ், சிம்பு விளம்பரங்கள் எங்கே? என்று கேட்ட இந்த கேள்விக்காக இந்த சிறப்பு பின்குறிப்பு. சிம்பு ரசிகர்கள் மன்னிக்கவும்.
2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் நன்னாளில் நடிகர் சிம்பு நடித்த காளை என்ற படம் வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த படம் வெளிவந்த சிறிது நாளில் (பிப்ரவரி மாதம் முதல் வாரம்) மதுரை எடிஷன் தினகரன் செய்தி தாளில் இந்த விளம்பரம் வந்தது.
இந்த விளம்பரத்தில் ஹிட் என்ற வார்த்தைக்கு பதிலாக ஷிட் என்று தவறாக டைப் செய்து கொடுத்தார் அந்த லோக்கல் விநியோகஸ்தர். அதனையும் கவனிக்காமல் வெளியிட்டு விட்டனர். ஆனால், பாவம், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முரட்டுக் காளை படத்தையும் போகிற போக்கில் ஷிட் என்று கூறியது தான் கொடுமை.
படங்கள் மற்றும் கருத்து உதவி: தமிழ் காமிக்ஸ் உலகின் தலைவர்.
அருமையான நினைவுகளை தூண்டிய விண்டேஜ் பதிவு.
ReplyDeleteஇந்த ஞாயிறை இனிய ஞாயிறாக மாற்றியமைக்கு நன்றி.
ஸ்கான்கள் ஒவ்வொன்றும் அருமை. போனஸ் ஆக வந்த விமர்சனங்கள் சூப்பர்.
அடுத்த பதிவு ஆவலை தூண்டுகிறது.
ReplyDeleteதொடருங்கள் உங்கள் சூப்பர் பதிவுகளை.
நண்பரே,
ReplyDeleteபொக்கிஷம் என்பது உங்கள் வலைப்பூவிற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ள பெயர்.
காலையில் சட்டென ஒர் கனவு கண்டது போல், அந்தக்கால சினிமா விளம்பரங்களை ரசிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
நிச்சயமாக உங்களிடம் பழைய இதழ்கள் சேகரிப்பில் இருக்கும் என்று நினைக்கிறேன். மிகச் சிறந்த முறையில் அவற்றை பேணி வந்திருக்கிறீர்கள். இது எளிதான ஒர் காரியமல்ல. இதை நீங்களோ அல்லது உங்கள் குடும்ப அங்கத்தினரில் ஒருவரோ, யார் செய்திருந்தாலும் அவரிற்கு என் மனதார்ந்த பாராட்டுக்கள்.
கல்கி இதழில் வெளியாகியிருக்கும் விளம்பரத் தமிழ் போல் இப்போது எழுதினால் கதைப்புத்தகம் என்று ஒதுக்கி விடுவார்கள். ஆனால் அதனைப் படிக்க சுகமாக இருக்கிறது. அதிலும் பக்தி வெள்ளமா காதல் வெள்ளமா எனும் கேள்வி அருமை.
முன்பு தியேட்டர்களில் பெண்களிற்கு தனியாக ஒர் புறம் இருக்கைகள் இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் டிக்கட் வாங்குவதற்கும் பிரத்தியேகமாக ஒர் டிக்கட் கவுன்டர். நாங்கள் கும்பல் அதிகமான நேரங்களில் அக்கா இரண்டு டிக்கட் எடுத்து தாருங்கள் என்று அவர்களிடம் காசைத் தந்து டிக்கட் வாங்குவோம். பெண்கள் எண்ணிக்கையை தியேட்டர் வாசல்களில் போஸ் குடுத்துக் கொண்டிருக்கும் ரோமியோக்களிடம் கேட்டால் சரியாகச் சொல்வார்கள்.
நீங்கள் வாத்தியார் ரசிகர்தானே:)
இதே வகையில் சிறப்பான பதிவுகளை தொடர்ந்திடுங்கள் நண்பரே.
excellent post. great scans to add to the commentary of yours.
ReplyDeletethe advertisement for the film edhirigal jakiradhai was in fact very much like a comics ad.
the best ad was the 1st one. liked the buman part for the gentleman.
would like to add one more point to your post.
ReplyDeletein those days, the importance was given to the producers and it cane be seen in the advertisements that some of the producers name was in front of the directors name, as the producers were the pay masters.
now a days, when it comes to this matter, only the director gets the top bill. pity the producers.
அருமையான பதிவு.
ReplyDeleteதொடருங்கள்.
முதல் மூன்று விளம்பரங்களும் அற்புதம்.
ReplyDeleteகுறிப்பாக அந்த முதல் விளம்பரம்:
இடி மின்னல் சீர
வெடி விண்ணில் மீற
புயல் நிலை கலங்கி மோத
ஆற்றில் அலைகள் மோத
அடடா அற்புதமான கவிதை வரிகள்.
அதுவும் கடைசியில் இருக்கும் ஒரு கருத்து சூப்பர்: கருத்துடன் கூடிய காட்சிகள் கண்ணியமான முறையில் காட்டப்படும் ஒரு தமிழ் படம்.
அருமை.
மற்றவை எல்லாம் சுமார்தான்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
அதுசரி, வாத்தியார், சூப்பர் ஸ்டார் விளம்பரங்கள் சரிதான். சிவாஜி கமல் விளம்பரங்கள் எங்கே?
ReplyDeleteஅடுத்தபடியாக இளைய தளபதி டாக்டர் விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித் விளம்பரங்கள் எங்கே?
லேட்டஸ்ட் நடிகர்கள் தனுஷ், சிம்பு விளம்பரங்கள் எங்கே?
பத்த வச்சுட்டியே பரட்டை........
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
எங்கள் உயிரும்,நடிப்பு இமயமுமான அன்பு அண்ணன்
ReplyDeleteரித்திஷ் அவர்களின் விளம்பர இலக்கியங்கள் எங்கே, எங்கே? :))
//
ReplyDeleteகனவுகளின் காதலன் said...
எங்கள் உயிரும்,நடிப்பு இமயமுமான அன்பு அண்ணன்
ரித்திஷ் அவர்களின் விளம்பர இலக்கியங்கள் எங்கே, எங்கே? :))//
check this out:
சந்திரமுகி சாதனையை முறியடிக்கப் போகும் படம்!
தோழர் காமிக்ஸ் பிரியன் அவர்களே,
ReplyDeleteஉங்களின் கேள்விக்கு இந்த விளம்பரம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்க வைக்கும் அளவிற்கு இந்த இரண்டு ஸ்கான்கள் இருக்கின்றன என்றே நம்புகிறேன்.
excellent one. keep it up.
ReplyDeletekindly check this out: http://www.neerottam.com/artpost/2009/09/ஷார்ல்-பெரோவின்-மாயாஜாலக/
அருமையான பதிவு நண்பரே.
ReplyDeleteஉண்மையில் இந்த வலைப் பூவுக்கு பொக்கிஷம் என்ற பெயரை பார்த்ததும் எங்கே நம்ம சேரனின் பொக்கிஷமோ என்று கூட பயந்தே பொய் விட்டேன். ஆனால் இன்று இந்த பதிவை பாத்தா பின்புதான் இந்த தலைப்புக்கு உள்ள உள் அர்த்தத்தை புரிந்து கொண்டேன்.
தொடர்ந்து இதனைப் போன்ற பதிவுகள் மூலம் எங்களை மகிழ்வியுங்கள்.
மடாதிபதி மகள் விளம்பரமும் அதன் வாசகமும் அருமையாக இருந்தன. இத்துணை சிரமம் மேற்கொண்டு அவர்கள் விளம்பரத்தை வடிவமைத்த இதே பதிவில் சிம்பு விளம்பரத்தை போட்டு எங்களை கொடுமை படுத்தி விட்டீர்கள். இருந்தாலும் இரண்டு விளம்பரங்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டை காணுங்கள். தலைமுறை இடைவெளி இருந்தாலும் கூட இரண்டு விளம்பரங்களும் இரண்டு வகையான படங்களை நினைவு படுத்தின.
ReplyDeleteஇப்போதெல்லாம் சினிமா விளம்பரங்கள் நடிகைகளின் அரைகுறை அழகை காட்டவும், நடிகரின் முகத்தை (கருப்பு கண்ணாடி அணிந்தவாறு) குளோஸ் அப்பில் காட்ட மட்டுமே உபயோகப் படுத்தப் படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. அதனை தவிர வேறதுவும் படத்தில் முக்கியமில்லை என்பதே அவர்களின் எண்ணம் போல தோன்றுகிறது.
பழைய படங்களை சேகரித்து பாதுகாக்கும் எண்ணம் நம்முடைய சினிமா ஆர்வலர்களிடையே துளியும் இல்லை என்பது மற்றுமொரு ஆணித்தரமான உண்மை. இப்போதும் பழைய கருப்பு வெள்ளை திரப் படங்களுக்கு நான் அடிமை. நேரம் கிடைக்கும்போதெல்லாம் பழைய படங்களை பார்ப்பதும், எல்.பி பிளேயரில் பாடல்களை கேட்பதும் என்னுடைய பொழுது போக்குகளாகி விட்டன. என்ன செய்வது? நம்முடைய டேஸ்ட் அப்படி ஆகி விட்டது.
இந்த எதிரிகள் ஜாக்கிரதை படம் எங்காவது கிடைத்தால் தெரியப் படுத்துங்கள்.
பதிவுக்கு கோடிக்கணக்கான நன்றி.
நல்ல பதிவு! மடாதிபதி மகள், தபால்காரன் தங்கை என்றெல்லாம் படங்கள் வந்திருக்கின்றன!
ReplyDelete(பி.கு.: என் வலைப்பதிவில் உங்கள் பின்னூட்டத்தைத் தவறுதலாக நீக்கிவிட்டேன். மன்னிப்பீராக!)
தல இத்தனை படங்களையும் எங்கே வைத்திருந்தீர் இத்தனை காலமாக??? பேணிப் பாதுகாத்த உம்மை பாராட்டத்தான் வேண்டும். அருமை அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பரே அருமை. எதிர் காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் பல தசாப்தங்களுக்கு முன்னால் தமிழ் அச்சு ஊடகம் எவ்வாறு இருந்த்து என்பதை இந்த தளம் அவர்களுக்குக் காட்டும்.
ReplyDeleteஅருமை, தொடரட்டும் உங்கள் பணி.