கடந்த பதிவான இயந்திரசாமியை உங்களில் பலருக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. தொடர்ந்து இது போன்ற சிறப்பான பதிவுகளை வழங்க முயல்கிறேன். இந்த பதிவை இடுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் எந்த விதமான தாமதமும் இராது என்பது உறுதி. இனிமேல் இந்த பதிவிற்கு செல்வோம்.
முன்பு ஒரு முறை மரண அடி மல்லப்பாவை சந்தித்து இருந்தீர்களே, நினைவிருக்கிறதா? இதோ, அவரின் ஜூனியரை சந்தியுங்கள்.
அனைவரும் ரசிக்கும் வகையில் இருப்பதே இந்த காமிக்ஸ் ஸ்டிரிப்பின் சிறப்பு அம்சம் ஆகும். என்ன ஒத்துக் கொள்கிறீர்களா?
இந்த பதிவு ஒரு சிறப்பு பதிவு என்பதால், இதோ, கோல்டன் ஒல்டீஸ் ஆக ராணி வார இதழின் சில சிறப்பு சிரிப்புகள்:
இந்த பதிவை நான் இடுவதற்கு ஒரு காரணமும் உள்ளது. சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று இருந்தபோது, அவரின் சிறு பெண் குழந்தை வார நாட்களை கூறச்சொன்னால், சண்டே,மன்டே என்று சொல்ல ஆரம்பித்தது. தமிழில் சொல்ல தெரியவில்லையாம். அப்போது நான் ஒரு கதையை சொல்லி வார நாட்களை நினைவு படுத்தினேன்.
ஞாயிற்றுகிழமை நகை காணோம்
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீடு திரும்பினான்,
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்.
மற்றுமொரு சிறப்பு சிரிப்பு:
விரைவில் அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.
அருமை நண்பரே,
ReplyDeleteதரமான படைப்புகளை இனம்காண உதவும் உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி.தொடர்ந்து இதனைப் போன்றே பதிவிடுங்கள்.
சமீப காலங்களில் ஆனந்த விகடன் உங்கள் பதிவுகளால் கவரப் பட்டு அவர்களும் பல காமிக்ஸ் ஸ்டிரிப்களை வெளியிட்டு வருகின்றனர்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
நண்பரே,
ReplyDelete//ஞாயிற்றுகிழமை நகை காணோம்
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீடு திரும்பினான்,
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்.//
என்னுடைய சிறுவயதில் நானும் இந்த பாடலை பாடி உள்ளேன். சிறுவயது நினைவுகளுக்கு நன்றி.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//விரைவில் அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்// ஆவலுடன் காத்து உள்ளேன், உங்களின் இந்த பதிவுக்கு.
ReplyDeleteதொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
super post. keep it up.
ReplyDeleteநல்லதொரு பதிவு, அருமையான ஸ்கான், நல்ல விமர்சனம்.
ReplyDeleteதொடருங்கள் தோழர்.
காமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
Next தமிழ்வாணனின் பதிவா? காமிக்ஸ் பற்றியதா? சூப்பர்.
ReplyDeleteகாமிக்ஸ் பிரியன்.
இவன் பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன்.
காமிக்ஸ் பிரியனின் பதிவுகள்
excellent post on the golden oldies.
ReplyDeletewe just love your scans which present us the olden days of clean comics strips.
i just loved the rhyme by which you have organised the weekly days.
ReplyDeletesimply superb. this is what the present day kids are missing. the natural way of learning.
waiting for the tamilvanan's post.
ReplyDeleteசிறப்பான பதிவு. நல்வரவு காமெடி ரசிக்கும் படியாக இருக்கிறது
ReplyDeleteகாமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதல.புது போஸ்ட் ஒண்ணு போட்டு இருக்கேன்.வந்து பாத்துபுட்டு எப்டி இருக்குன்னு சொல்லுங்க.
ReplyDeletehttp://illuminati8.blogspot.com/2010/02/wasabi-punisher-max.html
காமிக்ஸ் நண்பர்களே,
ReplyDeleteவேறு ஊரை சேர்ந்த யாரோ ஒருவர் ஒவ்வொரு மாதமும் சென்னைக்கு வந்து சென்னையில் கிடைக்கும் பல நூறு அரிய காமிக்ஸ் புத்தகங்களை கொள்ளையடித்து, அதனை பதுக்கி செல்கின்றனர். ஆனால் சென்னையில் இருக்கும் பல காமிக்ஸ் ரசிகர்கள் தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை, தமிழ் காமிக்ஸ் கிடைக்கவில்லை என்று அவதிப்படுகிறார்கள். இந்த கொடுமைகளுக்கு வழியே இல்லையா?
புஷ்பவதி பூங்காவனத்தின் புதையல்கள்
இன்ஸ்பெக்டர் இன்பராஜின் விசாரணை - காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1
காமிக்ஸ் குற்றம் - நடந்தது என்ன? பதிவு 1