இந்த பதிவு ஒரு சிறப்பு பதிவு என்பதால், இதோ, கோல்டன் ஒல்டீஸ் ஆக ராணி வார இதழின் சில சிறப்பு சிரிப்புகள்:
இந்த பதிவை நான் இடுவதற்கு ஒரு காரணமும் உள்ளது. சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று இருந்தபோது, அவரின் சிறு பெண் குழந்தை வார நாட்களை கூறச்சொன்னால், சண்டே,மன்டே என்று சொல்ல ஆரம்பித்தது. தமிழில் சொல்ல தெரியவில்லையாம். அப்போது நான் ஒரு கதையை சொல்லி வார நாட்களை நினைவு படுத்தினேன்.
ஞாயிற்றுகிழமை நகை காணோம்
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீடு திரும்பினான்,
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்.
மற்றுமொரு சிறப்பு சிரிப்பு:
விரைவில் அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.