அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். பல மாதங்களாக பதிவிடாமைக்கு மன்னிக்கவும். பணிச்சுமையும், மன உளைச்சலும் தான் பதிவிடாமைக்கு காரணங்கள். இனிமேல் குறைந்த பட்சம் ஓரிரு மினி அல்லது மைக்ரோ பதிவுகளாவது இட முயல்கிறேன்.
அமரர் தமிழ்வாணனின் ஒரு பதிவினை இட பல நாட்களாக தயார் செய்து வைத்து இருந்தும், இட இயலவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழ் காமிக்ஸ் பதிவுலகில் ஒரே வாண்டுமாம ஸ்பெஷல் தான். பதிவுலகின் இரண்டு ஹெவி வெயிட் பதிவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பதிவுகளின் மூலம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். அதனை எந்த ஒரு காமிக்ஸ் பதிவர்களும் மிஸ் செய்து இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் கூட அந்த பதிவின் சுட்டிகள்:
தமிழ் காமிக்ஸ் உலகம் (ஆங்கிலம்) கிங் விஸ்வா - வாண்டுமாமா
அகோதீக (தமிழ்) டாக்டர் செவன் - வாண்டுமாமா
வாண்டுமாமா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அந்த இரண்டு பதிவுகளே போதுமானது. வாண்டுமாமா அவர்கள் கல்கி நிறுவனத்தில் பணி புரிந்தபோது அவர் அடிக்கடி சினிமா விமர்சனங்களும் எழுதுவார். இதனை பற்றி ஏற்கனவே டாக்டர் செவன் அவர்கள் ஒரு முழு பதிவினை இட்டுள்ளார். அந்த பதிவினை படிக்க இங்கே செல்லவும்.
அந்த வகையில் பார்த்தால் வாண்டுமாமா அவர்கள் ஒரு பலதுறை வித்தகர். எனுடைய நண்பர் ஒருவர் கூறுவார், "வாண்டுமாமா மட்டும் குழந்தைகளுக்கு எழுதாமல் பெரியவர்களுக்கு என்று எழுத ஆரம்பித்து இருந்தால், இன்னுமொரு சுஜாதாவை நம் தமிழுலகம் கண்டு இருக்கும்". ஒரு விஷயம் பற்றி கூறியே ஆக வேண்டும்: சினிமா விமர்சனங்கள் எழுதும்போது கூட அவரின் அந்த "நியாய-தர்மங்கள்" வெளிப்பாடு சிந்தனை அவரின் எழுத்துக்களில் வெளிப்படும். அவரை பொறுத்த வரையில் அனைத்துமே சீரிய முறையில் இருக்க வேண்டும். அதனால் அனைத்தையுமே அவர் மிகச் சிறந்ததாக மட்டுமே அவர் எதிர்பார்ப்பார். இந்த ஒரு விமர்சனத்தை படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்:
மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், சினிமா விமர்சனங்கள் கௌசிகன் என்ற பெயரிலேயே இருக்கும். வாண்டுமாமா என்ற பெயரை அவர் சிறுவர் இலக்கியத்துக்கு அர்பணித்து விட்டார்.
விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.