Thursday, December 9, 2010

பொக்கிஷப் புதையல் 1

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.

இன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல் என்ற கதம்பம் வெளிவரும். இதில் நகைச்சுவை, காமிக்ஸ் ஸ்டிரிப், சினிமா விளம்பரங்கள், சினிமா விமர்சனங்கள், சிரிக்க சிறந்த ஜோக்குகள், சிறப்பான பல்சுவை தோரணங்கள் என்று பலவகையான கதம்பமாக இருக்கும். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் தொடருகிறேன்.

கல்கி 1967: இந்த கதம்பம் பகுதியில் கல்கி இதழின் 1967ம் ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் இருந்து சில பல பொக்கிஷங்களை கண்டு ரசிக்கலாம். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆண்டு சிறப்பு பகுதிகளை எழுதல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.

சுதர்சனம் கார்னர்: ஓவியர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் சுதர்சனம் அவர்களை மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அவரின் ஜோக்குகள் கல்கி இதழில் வெளிவந்து நம் மனதை கொள்ளை கொண்டன. அவற்றை இனிமேல் ஒவ்வொரு வாரமும் கதம்பம் பகுதியில் வழங்கலாம் என்றிருக்கிறேன். முதல் பகுதி இதோ:

 

1967 SJ 1 1967 SJ 2 1967 SJ 3

காமிக் ஸ்டிரிப் கார்னர்:

கல்கி இதழ்களில் அந்த நாட்களில் (குமுதம் போல) பல காமிக் ஸ்ட்ரிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருந்தன. அவற்றிற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் தனியாக இருந்தது. சிறப்பான பல ஸ்ட்ரிப்புகள் வந்த காலம் அது. இதோ எனக்கு பிடித்த ஒரு ஸ்ட்ரிப்: மந்திரிகள் உலகம்.

அரசியல் கருத்துக்களை எடுத்து சொல்வதில் கல்கி இதழுக்கு நிகரே கிடையாது. குமுதமும், ஆனந்த விகடனும் சற்றே மழுப்பி எழுதுபவை. ஆனால் கல்கி அப்படி அல்ல. ஆனந்த விகடனில் கல்கி அவர்கள் இருந்த காலத்திலேயே அவரின் கருத்துக்கள் பிரபலம். ஆகையால் அவரின் சொந்த இதழில் சொல்லவே வேண்டாம்.

1967 MU 1 1967 MU 2

1967 MU 3

சினிமா விமர்சன கார்னர்:

கல்கி பத்திரிக்கையானது சினிமா விமர்சனதிர்க்கென்றே புகழ் பெற்ற பதிரிக்கையாகும். இந்த பத்திரிக்கையில் தான் தமிழ் படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் (ஒவ்வொரு வாரமும்), ஆங்கில படங்கள், கன்னட படங்கள், நாடகங்கள் என்று பல விதமான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருந்தன. அதிலும் குறிப்பாக காந்தன் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களுக்கு விமர்சனம் எழுதுவார். ஆங்கிலப்படங்களுக்கு பெரும்பாலும் ரா.வி எழுதுவார் (சிற்சில சமயங்களில் வாண்டுமாமா அவர்களும் எழுதுவது உண்டு). இப்படியாக கல்கி சினிமா விமர்சனம் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்த காலம் அது.

பல்ஜ் போர்: ஆங்கில படங்கள் சரமாரியாக வெளிவந்துக்கொண்டு இருந்த காலகட்டம் அது. சென்னையில் இருந்த அண்ணா சாலையில் இருந்த நான்கு பிரபல திரையரங்குகளிலும் ஆங்கில படங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். மக்களும் தங்களுடைய ஆதரவை ஆங்கிலப்படங்களுக்கு தந்துகொண்டிருந்த காலம் அது. அதிலும் ஜேம்ஸ் பான்ட் படங்கள் உலக அளவில் வெளிவந்து ஓரிரு ஆண்டுகள் கழித்தே இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த காலம் அது. இந்த சூழலில் பல விதமான ஆங்கிலப்படங்கள் வந்து ஓடிக்கொண்டிருந்தன.

1967 FR 1

பட்டணத்தில் பூதம்: வழக்கமாக பெயரில்லாமல் விமர்சனம் இருந்தால் அது வழக்க்கமாக விமசனம் செய்யும் நபர் இல்லாமல் வேறொருவர் செய்த விமர்சனம் என்று பொருள். அநேகமாக இந்த விமர்சனம் வாண்டுமாமா அவர்கள் எழுதியதாக கூட இருக்கலாம். யார் கண்டது? சமூக அவலங்களை சாடிய விதத்தில் இருந்தே இது வாண்டுமாமா அவர்களின் கைவண்ணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. 

1967 FR 2

டாக்டர் ஷிவாகோ:

டாக்டர் ஷிவாகோ படம் இரண்டு ஆண்டுகளாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று மக்கள் காத்திருந்தனர். உலக அளவில் இந்த படம் சிறந்த திரைப்படம் என்று பெயரெடுத்திருந்த நேரமது. ஆனால் தியேட்டரில் படம் வரவில்லை. அந்த காலத்தில் டிவிடி, இன்டர்நெட் இல்லாமல் மக்கள் பத்திரிக்கைகளையே நம்பி இருந்தனர். ஆகையால் கல்கியில் வந்த விமர்சனம் சிறப்பாக பேசப்பட்டது. படம் வந்த சில நாட்களில் (பெரும்பாலும் அதே நாளில்) இப்போதெல்லாம் படங்களை சென்னையில் பார்க்கும் நாம், அந்த காலத்தில் இருந்திருந்தால்? யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. டாக்டர் ஷிவாகோ படம் உலக அளவில் வந்துசரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த படம் வெளியானது.

1967 FR 3

சாமா ஜோக்குகள்:

சுதர்சனம் அவர்களின் ஜோக்குகளை போலவே (சொல்லப்போனால் அவரைவிட) புகழ் பெற்றவை சாமா அவர்களின் ஜோக்குகள். அந்தக் காலத்தில் ஜோக்குகளுக்கு படம் வரைபவரே நகைச்சுவை துணுக்குகளையும் எழுதினர் என்றால் அது சாதாரண விஷயமே. சாமா அவர்களின் ஜோக்குகளையும் கூட கல்கி சிறிது கவனிக்கலாம். ஆனந்தவிகடன் தனது பழைய ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை கல்கியும் கொடுக்கலாம். தனியாக இவர்களின் ஜோக்கு புத்தகங்களை வெளியிடலாம். கல்கி கவனிக்குமா?

இந்த ஜோக்கில் முதல் படத்தில் இருக்கும் அந்த போட்டோ பிடிப்பவரை சற்று உற்று நோக்குங்கள். நம்ம நடிகர் சோ ராமசாமி போல இல்லை?

SAJ 1 SAJ 2 SAJ 3

விளம்பர கார்னர்:

விளம்பரம் என்றால் பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்ல. அடுத்து வரப்போகும் தொடர்கள், சிறப்பிதழ்கள், போட்டிகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள். கல்கி வரப்போகும் தொடர்களை விளம்பரம் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக ஒரு தொடர்கதை வரப்ப்போகிறது என்றால் மூன்று நான்கி புத்தகங்களில் இருந்தே விளம்பரம் செய்வார்கள். அதுவும் இப்போது இருக்கும் இந்த அர்ஜுன் அம்மா யாரு போன்ற டீசர் விளம்பரங்கள் கல்கியில் தான் ஆரம்பித்தன என்றால் அது மிகையாகாது. இதோ ஆம் ஆண்டு வந்த சில விளம்பரங்கள்:

1967 AD 1 1967 AD 2

1967 AD 3

வாசகர்களுக்கான புதிர் கார்னர்:

வாசகர்களுக்கென்றே பலவிதமான புதிர்களும், போட்டிகளும் கல்கியில் சிறந்து விளங்கியது. குறிப்பாக போட்டோ போட்டிகள், வாழ்க்கை குறிப்பு போட்டிகள், பிரபலங்களின் சிறு வயது நினைவு குறிப்பு போட்டிகள் என்று கல்கியே போட்டிகளால் கலை கட்டிய சமயம் அது. அந்த சமயத்தில் வந்த ஒரு பகுதியே யார் தெரியுமா? என்ற போட்டோ போட்டி பகுதி. இந்த பகுதியில் ஒரு போட்டோ இருக்கும். அந்த போட்டோவில் ஒரு பிரபலத்தின் சிறு வயது போட்டோ இருக்கும், அதை வைத்து வாசகர்கள் அந்த பிரபலத்தை கண்டறிய வேண்டும். இந்த போட்டியையே நான் நமது வாசகர்களுக்கும் அளிக்கிறேன்: இந்த யார் தெரியுமா புக்தியில் இருக்கும் மூன்று பிரபலங்கள் யார்? அடுத்து வெள்ளிகிழமை அன்று நான் பதில் அளிக்கும் முன்பே பதிலை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.

YT 1A YT 2A YT 3A

ஒரே ஒரு க்ளூ: இந்த மூவரில் ஒருவர் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் சம்பந்தப்பட்டவர்.

அடுத்த வெள்ளியன்று இந்த புதிர்களுக்கு விடைகளுடன், மற்றும் பிற பொக்கிஷ புதையல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.

Wednesday, June 9, 2010

கவுன்சிலர் கனகசபை – குமுதம் 1969: ஜெ…வின் காமிக் ஸ்ட்ரிப்புகள்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று நம்முடைய வலையுலக நண்பர் டாக்டர் விஜய், ச்சே, மன்னிக்கவும், டாக்டர் செவன் அவர்களுக்கு பிறந்த நாளாம், வாழ்த்துக்களை கூறுவதோடில்லாமல் என்னுடைய சார்பில் ஒரு சிறிய பதிவினை இட்டு அட்டெண்டன்ஸ் போட்டுக் கொள்கிறேன்.

இந்த ஸ்ட்ரிப்பில் முதல் ஜோக் டாக்டரைப்பற்றி இருப்பதால் இதனை முதலில் இட்டு இருக்கிறேன்.

A

அடுத்தபடியாக வரும் ஜோக்கை கூர்ந்து படியுங்கள். அந்த நாட்களில் இருந்த சொல் விளையாட்டும், சிலேடையும் இப்போது காணாமல் போய் விட்டது கடினமாக உள்ளது. B

அடுத்தபடியாக 1969ம் ஆண்டு குமுதத்தில் வந்த கவுன்சிலர் கனகசபை என்ற வாரந்திர ஸ்ட்ரிப்பின் மூன்று பகுதிகளை ரசிக்க போகிறோம்:

Part1:

1

Part 2:

2

Part 3:

3

விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.

Saturday, May 1, 2010

போலி சாமியார்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று மே தினம். வழமையாக சிறப்பு தினங்களில் பதிவிடும் நமது காமிக்ஸ் ரசிகர்கள் இன்று ஏனோ வரவில்லை. அதனால் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பதிவுடன் ஆஜராகி உள்ளேன்.

தற்போதுள்ள சூழலில் நம்மால் முன்மாதிரி பதிவிட இயலவில்லை.மாதம் ஒரு பதிவிட முக்கிக்கொண்டு இருக்கையில் எங்கள் அண்ணா, எங்கள் ஆசான், பெரியண்ணா திரு கனவுகளின் காதலர் அவர்கள் கடந்த மாதம் மட்டும் பதினோரு முத்து முத்தான பதிவுகளை இட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு ஒரு சல்யூட். அவருடைய ஏப்ரல் பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு. சுவாமி குத்தானந்தா என்ன செய்வாரோ என்றும் பயமாக உள்ளது.

சிறுவயதில் நான் பூந்தளிர் இதழில் படித்த ஒரு சாமியார் கதையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். படித்து மகிழுங்கள்.

1st page
2nd Page

அடுத்த ஞாயிறு முதல் வழமையான பதிவுகளை எதிர்பாருங்கள்.

Wednesday, April 14, 2010

அரசியல் சூப்பர் கிங்ஸ்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று காமிக்ஸ் உலகில் வாராது வந்த மாமணிகள் அனைவரும் ஐந்து, ஆறு மாதங்கள் கழித்து பதிவிடுவதை பார்த்து, நானும் ஒரு பதிவிடலாம் என்று வந்துள்ளேன். இந்த பதிவும் ஒரு "மன்னர்கள்/ராஜாக்கள்" சம்பந்தப்பட்ட பதிவுதான். ஆம், தலைப்பில் உள்ளது போல அரசியல் சூப்பர் கிங்ஸ் தான் இந்த பதிவின் சாராம்சம்.

தற்போது IPL மோகம் தலைவிரித்தாடுகிறது. எங்கே சென்றாலும் யாராவது அதனைப் பற்றியே பேசுகின்றனர். அதனால் நமது அரசியல் உலகில் நிகழும் நிகழ்வுகளை இந்த IPL போட்டி அணிகளுடன் சம்பந்தப்படுத்தி யோசிப்பதில் வியப்பேதுமில்லை. சமீபத்தில் நான் படித்து ரசித்த இரண்டு கட்டுரைகளின் பக்கங்களை உங்களுக்காக இங்கே வழங்குகிறேன். படித்து மகிழுங்கள். இரண்டுமே கிரிக்கெட் மற்றும் அரசியலை தொடர்புபடுதுபவை.

முதலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்த குமுதம் இதழில் இருந்து "கவுண்டமணி - செந்தில்" காமெடிக்கு புகழ் பெற்ற வாழு பிரசாத் அவர்களின் கற்பனையில் வந்த கட்டுரை:

CSK 1
CSK 2

பிறகு, நான் மிகவும் ரசிக்கும் சட்டைர் எழுத்தாளர் சத்யாவின் கைவண்ணத்தில் சென்றவார துக்ளக் இதழில் வந்த இருபக்க கட்டுரை:

CSK 3
CSK 4

தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம் மற்றும் சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Sunday, March 14, 2010

சினிமா விமர்சகர் வாண்டுமாமா

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். பல மாதங்களாக பதிவிடாமைக்கு மன்னிக்கவும். பணிச்சுமையும், மன உளைச்சலும் தான் பதிவிடாமைக்கு காரணங்கள். இனிமேல் குறைந்த பட்சம் ஓரிரு மினி அல்லது மைக்ரோ பதிவுகளாவது இட முயல்கிறேன்.

அமரர் தமிழ்வாணனின் ஒரு பதிவினை இட பல நாட்களாக தயார் செய்து வைத்து இருந்தும், இட இயலவில்லை. கடந்த ஒரு வாரமாக தமிழ் காமிக்ஸ் பதிவுலகில் ஒரே வாண்டுமாம ஸ்பெஷல் தான். பதிவுலகின் இரண்டு ஹெவி வெயிட் பதிவர்களும் போட்டி போட்டுக் கொண்டு பதிவுகளின் மூலம் நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள். அதனை எந்த ஒரு காமிக்ஸ் பதிவர்களும் மிஸ்  செய்து இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும் கூட அந்த பதிவின் சுட்டிகள்:

தமிழ் காமிக்ஸ் உலகம் (ஆங்கிலம்) கிங் விஸ்வா - வாண்டுமாமா

அகோதீக (தமிழ்) டாக்டர் செவன் - வாண்டுமாமா 

வாண்டுமாமா பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள அந்த இரண்டு பதிவுகளே போதுமானது. வாண்டுமாமா அவர்கள் கல்கி நிறுவனத்தில் பணி புரிந்தபோது அவர் அடிக்கடி சினிமா விமர்சனங்களும் எழுதுவார். இதனை பற்றி ஏற்கனவே டாக்டர் செவன் அவர்கள் ஒரு முழு பதிவினை இட்டுள்ளார். அந்த பதிவினை படிக்க இங்கே செல்லவும்.

அந்த வகையில் பார்த்தால் வாண்டுமாமா அவர்கள் ஒரு பலதுறை வித்தகர். எனுடைய நண்பர் ஒருவர் கூறுவார், "வாண்டுமாமா மட்டும் குழந்தைகளுக்கு எழுதாமல் பெரியவர்களுக்கு என்று எழுத ஆரம்பித்து இருந்தால், இன்னுமொரு சுஜாதாவை நம் தமிழுலகம் கண்டு இருக்கும்". ஒரு விஷயம் பற்றி கூறியே ஆக வேண்டும்: சினிமா விமர்சனங்கள் எழுதும்போது கூட அவரின் அந்த "நியாய-தர்மங்கள்" வெளிப்பாடு சிந்தனை அவரின் எழுத்துக்களில் வெளிப்படும். அவரை பொறுத்த வரையில் அனைத்துமே சீரிய முறையில் இருக்க வேண்டும். அதனால் அனைத்தையுமே அவர் மிகச் சிறந்ததாக மட்டுமே அவர் எதிர்பார்ப்பார். இந்த ஒரு விமர்சனத்தை படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்:

kalki cinema review by kausikan

மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், சினிமா விமர்சனங்கள் கௌசிகன் என்ற பெயரிலேயே இருக்கும். வாண்டுமாமா என்ற பெயரை அவர் சிறுவர் இலக்கியத்துக்கு அர்பணித்து விட்டார்.

விரைவில் (next week?!?) அமரர் தமிழ்வாணனின் ஒரு படைப்போடு உங்களை சந்திக்கிறேன்.