Friday, October 16, 2009

இயந்திர சாமி


அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். கடந்த பதிவான குரங்கு குசலவை உங்களில் பலருக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

இந்த பதிவை இடுவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு மன்னிக்கவும். இனிமேல் எந்த விதமான தாமதமும் இராது என்பது உறுதி. இனிமேல் இந்த பதிவிற்கு செல்வோம். அதற்க்கு முன்பு அனைவருக்கும் என்னுடைய தீப ஒளி நல்வாழ்த்துக்கள். மங்களம் உண்டாகட்டும்.

நம்முடைய இந்த தீபாவளி ஸ்பெஷல் பதிவில் நாம் ஆராயப்போகும் ஸ்டிரிப் இயந்திர சாமி ஆகும். இது சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு கணிப்பொறி எல்லாம் வரும் முன்பு ஆரம்பிக்கப் பட்ட ஒரு ஸ்டிரிப் ஆகும். இந்த வருடக்கணக்கை மறவாதீர்கள். ஏனெனில் இந்த ஸ்டிரிப் இன்றளவும் பலரால் நினைக்கப் படுவதற்கு காரணம் இந்த ஸ்டிரிப்பின் காலம் கடந்த கருத்துக்களும் சமூக முன்னோட்ட சிந்தனையும் தான். இந்த இயந்திரசாமி ஸ்டிரிப் தினமணிக்கதிர் இதழில் ஓவியர் ஜெயராஜ் அவர்களின் கை வண்ணத்தில் வந்து பலரை மகிழ்வித்தது. பல சமயம் இந்த ஸ்டிரிப்பில் வந்த கருத்துக்கள் ஆசிரியர் மற்றும் ஜெயராஜ் அவர்களின் கருத்துக்கள் ஆகும். மேலும் சில சமயங்களில் பிரபல அரசியல் விமர்சகர் சோ அவர்களின் கருத்துக்களும் வந்து கலக்கும். இதோ ஒரு சாம்பிள்:

I S 26  Dinamani kathir 1979

என்னடா இதெல்லாம் ஒரு ஸ்டிரிப்பா? என்று கேட்காதீர்கள். முப்பது வருடங்களுக்கு முன்பு ரோபோ பற்றி எல்லாம் ஒரு தேர்ந்த ஞானம் இல்லாத கால கட்டத்தில் வந்த இந்த ஸ்ட்ரிப் இது. மேலும் இது ஒரு பேண்டசி தானே? அதனால் ஒரு ரோபோ நம்முடைய நிஜ உலகில் வந்தால் என்ன நடக்கும் என்ற சிந்தனையின் பேரில் வந்த இந்த ஸ்டிரிப்'ஐ ரசியுங்கள். அரசிய கருத்துக்களுக்கும் பஞ்சமில்லை. இதோ காங்கிரஸ் கூட்டணியை தாக்கும் சோ அவர்களின் கருத்துக்கு வந்த ஸ்டிரிப்.

I S 15 Dinamani kathir 1979

நம்முடைய தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் இயந்திரங்களும் கலந்து கொண்டால் அல்லது இந்த சம்பவங்களில் அவர்கள் பங்கு கொண்டால் என்ன நடக்கும் என்பதே இந்த ஸ்டிரிப் ஆரம்பித்ததின் நோக்கம். நாம் எல்லோரும் ஏதேனும் திருவிழா சென்றால் நடக்கும் சம்பாஷணையை இரண்டு ரோபோக்கள் நடத்திக் காட்டுகின்றன. பாருங்கள்.

I S 22  Dinamani kathir 1979

சரி, சரி. இந்த பதிவு நேரமின்மை காரணமாக ஒரு சிறிய பதிவே. அதனால் அதனை ஈடுகட்ட இதோ சில ஜோக்குகள்.

1979 dinamani kathir 1

என்னடா இந்த ஓவியரின் கை வண்ணத்தை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா? இவர் வேறு யாரும் அல்ல. நம்முடைய பிரபல ஓவியர் செல்லம் தான்.

சமீபத்தில் நம்மை விட்டு சிவலோக பிராப்தி அடைந்த பிரபல ஓவியர் சுதர்சன் அவர்களின் கைவரிசையை அடுத்த மூன்று ஜோக்குகளில் பாருங்கள்.

1

இந்த ஜோக்குகள் எல்லாம் எழுபதுகளில் கல்கி இதழில் வந்தவை என்பதை சொல்ல மறந்து விட்டேன்.

2

தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களில் உள்ள நகைச்சுவை அம்சங்களை வெளிக் கோணரவதே இவரின் வேலை. அதுவும் இவருக்கு யாரும் ஸ்கிரிப்ட் எழுதுவது இல்லை. ஆம், இவர் ஒரு கிரியேட்டர் ஆவார். இவரின் ஜோக்குகளுக்கு இவரே ஸ்கிரிப்ட் அமைத்துக் கொள்வார்.

3

அனைவருக்கும் மறுபடியும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

11 comments:

  1. நண்பரே,

    சிறப்பான பதிவு. அருமையான கடந்தகால படைப்புக்களை எங்கள் ரசனைக்கு தந்து மகிழ்விக்கிறீர்கள்.

    சிவலோகப் பிராப்தி- இந்த வார்தையைப் படித்தே எவ்வளவு காலங்கள் ஆகிவிட்டது, அதனை நயமாக பயன்படுத்தியதற்காக மான் மார்க் பட்டாஸ் பெட்டி ஒன்று உங்களிற்கு இனாமாக வழங்கப்படுகிறது :)

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    தொடருங்கள்.

    இதுவரை கேள்விப் படாத ஒரு ஸ்டிரிப் இது.

    ReplyDelete
  3. நண்பரே,

    ஒரு விஷயம் கவனித்தீர்களா? உங்கள் பதிவுகள் வர ஆரம்பித்ததில் இருந்து ஆனந்த விகடனில் கூட காமிக்ஸ் ஸ்டிரிப்புகளை மறுபடியும் ஆரம்பித்து விட்டார்கள்.

    வாழ்த்துக்கள். இந்த மாதிரி பதிவுகளை தொடருங்கள். இந்த பதிவுகள் எங்களுக்கு ஒரு பாடமாகவே இருக்கின்றன.

    ReplyDelete
  4. காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இயந்திர சாமி - சூப்பர் சாமி.

    மேலும் இது போன்ற பல விஷயங்களை வெளியிடவும்.

    உண்மையில் தினமணி கதிர் புத்தகத்தை பற்றி கேள்விப் பட்டு இருந்தாலும் (ராஜேஷ் குமார் மூலமாக) அந்த பழைய புத்தகங்களை பார்த்தது இல்லை. அந்த குறையை உங்கள் பதிவின் மூலம் ஓரளவுக்கு தீர்த்து விட்டீர்கள். அதற்க்கு நன்றி.

    ஓவியர் ஜெயராஜ் அவர்களின் கைவண்ணமும் சோ அவர்களின் அரசியல் பார்வையும் ஒன்று சேர்ந்து ரசிக்க வைக்கிறது. இப்போது துக்ளக் இதழில் வரும் சத்யாவின் அரசியல் கருத்து சார்ந்த கார்டூன்களும் அருமை.

    அடுத்த பதிவு என்ன? சைட் பாரில் அப்டேட் செய்யக் காணோமே?

    ReplyDelete
  6. விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்

    (தமிழ் நாட்டில் இருந்த தமிழன் என்பதால் இப்படி சொல்ல வேண்டி இருக்கிறது).

    ReplyDelete
  7. all the 3 iyandhira sami's were wonderful. would love to see more of this kind in the near future.

    who was the editor of dinamani kathir in those days? was it cho?

    ReplyDelete
  8. the 3rd sudarsan strip was very nice.

    they were so clean in the comics sense without any "in" meanings, unlike the present day scenario.

    happy diwali to you & Your family/friends circle.

    ReplyDelete
  9. லயன் காமிக்ஸ் லோகோவை போட்டதும் போட்டீர் தாமதம் உமக்கும் ஆரம்பித்துவிட்டது

    ReplyDelete