Saturday, May 1, 2010

போலி சாமியார்

அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்று மே தினம். வழமையாக சிறப்பு தினங்களில் பதிவிடும் நமது காமிக்ஸ் ரசிகர்கள் இன்று ஏனோ வரவில்லை. அதனால் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு ஒரு சிறிய பதிவுடன் ஆஜராகி உள்ளேன்.

தற்போதுள்ள சூழலில் நம்மால் முன்மாதிரி பதிவிட இயலவில்லை.மாதம் ஒரு பதிவிட முக்கிக்கொண்டு இருக்கையில் எங்கள் அண்ணா, எங்கள் ஆசான், பெரியண்ணா திரு கனவுகளின் காதலர் அவர்கள் கடந்த மாதம் மட்டும் பதினோரு முத்து முத்தான பதிவுகளை இட்டு நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி உள்ளார். அவருக்கு ஒரு சல்யூட். அவருடைய ஏப்ரல் பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு. சுவாமி குத்தானந்தா என்ன செய்வாரோ என்றும் பயமாக உள்ளது.

சிறுவயதில் நான் பூந்தளிர் இதழில் படித்த ஒரு சாமியார் கதையை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். படித்து மகிழுங்கள்.

1st page
2nd Page

அடுத்த ஞாயிறு முதல் வழமையான பதிவுகளை எதிர்பாருங்கள்.

15 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  ReplyDelete
 2. //அடுத்த ஞாயிறு முதல் வழமையான பதிவுகளை எதிர்பாருங்கள்.//

  Eagerly awaiting.

  ReplyDelete
 3. மீ த தேர்டு.

  தொடர்ந்து பதிவுடுங்கள் தோழரே.

  ReplyDelete
 4. //சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை//

  அப்படி எல்லாம் ஒரு பெரிய மர்மமும் இல்லை தோழர். நேரமின்மையும் ஒரு காரணம். உண்மையை சொல்வதானால் ஒரு சாமியார் பதிவு கடந்த ஆறு வாரங்களாக தூங்கிக்கொண்டு இருக்கிறது. வெகு விரைவில் பதிவிடுகிறேன்.

  ReplyDelete
 5. விஸ்வா,

  வருகைக்கு நன்றி. தொடர்ந்து பதிவிடவே ஆசை. முயல்கிறேன்.

  ReplyDelete
 6. ஒலக காமிஸ் ரசிகரே,

  தொடர்ந்து நீங்களும் வருகை தருவதற்கு நன்றி. விரைவில் சுவாமியாரைப்பற்றிய பதிவினை இடுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. காமிக்ஸ் காதலா!
  "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்று ஒரு பழமொழி உண்டு கேள்வி பட்டிருக்கிறீர்களா? சாமியார் காற்று காமிக்ஸ் உலகிலும் அடிக்க தொடங்கி விட்டதே! நடக்கட்டும்... நடக்கட்டும்...!

  ReplyDelete
 8. \\ எங்கள் அண்ணா, எங்கள் ஆசான், பெரியண்ணா திரு கனவுகளின் காதலர் \\ அடைமொழிகள் அற்புதம். இத்தகைய சிறப்பு அடைமொழிகளுக்கு கனவுகளின் காதலர் முழுமையாக தகுதியானவரே என்பது என் கருத்து.

  ReplyDelete
 9. \\பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு.\\

  கண்டிப்பாக 'சித்திரக்கதை' வலைதளத்தில் ஒரு பதிவு உண்டு

  ReplyDelete
 10. உண்மை என்பதே உண்மையல்ல என்ற உண்மை உங்களில் எத்துனை பேருக்கு தெரியும்?

  தெரியாத விடயங்களை நாம் அனைவரும் பயத்துடன் ஒதுக்கி அதனை செய்வது தவறு என்று பட்டியலிடுவதில் மனித மனம் தவறுவதே இல்லை. ஆகையால் உங்களை நான் குற்றம் கூறவில்லை. என் செய்வீர்? உங்களில் எத்துனை பேருக்கு கூடு விட்டு கூடு பாயத்தேரியும்?

  ReplyDelete
 11. //சமீப நிகழ்வுகளில் நம்முடைய கவனத்தினை பெரிதும் கொள்ளையடித்த சாமியாரை பற்றி இன்னமும் ஒலக காமிக்ஸ் ரசிகர் பதிவிடாமல் இருப்பதன் மர்மம் எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதனால் நான் பிள்ளையார் சுழி போட்டு சாமியார்களை பற்றிய சிறு பதிவினை ஆரம்பிக்கிறேன். மற்றவர்கள் தொடர்ந்தால் மகிழ்வு. சுவாமி குத்தானந்தா என்ன செய்வாரோ என்றும் பயமாக உள்ளது//

  ஆசிரமத்தின் பேரைக் கெடுக்க உமக்கு எத்துனை துணிச்சல்? தயவு செய்து தவறான பிரசாரத்திற்கு பலியாகாதீர்கள்.

  ReplyDelete
 12. சாமியை நம்புங்கள், ஆசாமியை அல்ல.

  believe in Sami, not in aasami.

  ReplyDelete
 13. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

  நிர்வாக குழு,

  தகவல் வலைப்பூக்கள்.....

  http://thakaval.net/blogs/comics/

  ReplyDelete