அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள்.
இன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல் என்ற கதம்பம் வெளிவரும். இதில் நகைச்சுவை, காமிக்ஸ் ஸ்டிரிப், சினிமா விளம்பரங்கள், சினிமா விமர்சனங்கள், சிரிக்க சிறந்த ஜோக்குகள், சிறப்பான பல்சுவை தோரணங்கள் என்று பலவகையான கதம்பமாக இருக்கும். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் தொடருகிறேன்.
கல்கி 1967: இந்த கதம்பம் பகுதியில் கல்கி இதழின் 1967ம் ஆண்டு வெளிவந்த புத்தகங்களில் இருந்து சில பல பொக்கிஷங்களை கண்டு ரசிக்கலாம். இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆண்டு சிறப்பு பகுதிகளை எழுதல்லாம் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை தெரிய படுத்துங்கள்.
சுதர்சனம் கார்னர்: ஓவியர் மற்றும் நகைச்சுவை எழுத்தாளர் சுதர்சனம் அவர்களை மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். அவரின் ஜோக்குகள் கல்கி இதழில் வெளிவந்து நம் மனதை கொள்ளை கொண்டன. அவற்றை இனிமேல் ஒவ்வொரு வாரமும் கதம்பம் பகுதியில் வழங்கலாம் என்றிருக்கிறேன். முதல் பகுதி இதோ:
காமிக் ஸ்டிரிப் கார்னர்:
கல்கி இதழ்களில் அந்த நாட்களில் (குமுதம் போல) பல காமிக் ஸ்ட்ரிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக்கொண்டிருந்தன. அவற்றிற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் தனியாக இருந்தது. சிறப்பான பல ஸ்ட்ரிப்புகள் வந்த காலம் அது. இதோ எனக்கு பிடித்த ஒரு ஸ்ட்ரிப்: மந்திரிகள் உலகம்.
அரசியல் கருத்துக்களை எடுத்து சொல்வதில் கல்கி இதழுக்கு நிகரே கிடையாது. குமுதமும், ஆனந்த விகடனும் சற்றே மழுப்பி எழுதுபவை. ஆனால் கல்கி அப்படி அல்ல. ஆனந்த விகடனில் கல்கி அவர்கள் இருந்த காலத்திலேயே அவரின் கருத்துக்கள் பிரபலம். ஆகையால் அவரின் சொந்த இதழில் சொல்லவே வேண்டாம்.
சினிமா விமர்சன கார்னர்:
கல்கி பத்திரிக்கையானது சினிமா விமர்சனதிர்க்கென்றே புகழ் பெற்ற பதிரிக்கையாகும். இந்த பத்திரிக்கையில் தான் தமிழ் படங்கள் மற்றும் ஹிந்தி படங்கள் (ஒவ்வொரு வாரமும்), ஆங்கில படங்கள், கன்னட படங்கள், நாடகங்கள் என்று பல விதமான விமர்சனங்கள் வந்துக்கொண்டே இருந்தன. அதிலும் குறிப்பாக காந்தன் அவர்கள் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களுக்கு விமர்சனம் எழுதுவார். ஆங்கிலப்படங்களுக்கு பெரும்பாலும் ரா.வி எழுதுவார் (சிற்சில சமயங்களில் வாண்டுமாமா அவர்களும் எழுதுவது உண்டு). இப்படியாக கல்கி சினிமா விமர்சனம் படிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்த காலம் அது.
பல்ஜ் போர்: ஆங்கில படங்கள் சரமாரியாக வெளிவந்துக்கொண்டு இருந்த காலகட்டம் அது. சென்னையில் இருந்த அண்ணா சாலையில் இருந்த நான்கு பிரபல திரையரங்குகளிலும் ஆங்கில படங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். மக்களும் தங்களுடைய ஆதரவை ஆங்கிலப்படங்களுக்கு தந்துகொண்டிருந்த காலம் அது. அதிலும் ஜேம்ஸ் பான்ட் படங்கள் உலக அளவில் வெளிவந்து ஓரிரு ஆண்டுகள் கழித்தே இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த காலம் அது. இந்த சூழலில் பல விதமான ஆங்கிலப்படங்கள் வந்து ஓடிக்கொண்டிருந்தன.
பட்டணத்தில் பூதம்: வழக்கமாக பெயரில்லாமல் விமர்சனம் இருந்தால் அது வழக்க்கமாக விமசனம் செய்யும் நபர் இல்லாமல் வேறொருவர் செய்த விமர்சனம் என்று பொருள். அநேகமாக இந்த விமர்சனம் வாண்டுமாமா அவர்கள் எழுதியதாக கூட இருக்கலாம். யார் கண்டது? சமூக அவலங்களை சாடிய விதத்தில் இருந்தே இது வாண்டுமாமா அவர்களின் கைவண்ணம் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
டாக்டர் ஷிவாகோ:
டாக்டர் ஷிவாகோ படம் இரண்டு ஆண்டுகளாக தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று மக்கள் காத்திருந்தனர். உலக அளவில் இந்த படம் சிறந்த திரைப்படம் என்று பெயரெடுத்திருந்த நேரமது. ஆனால் தியேட்டரில் படம் வரவில்லை. அந்த காலத்தில் டிவிடி, இன்டர்நெட் இல்லாமல் மக்கள் பத்திரிக்கைகளையே நம்பி இருந்தனர். ஆகையால் கல்கியில் வந்த விமர்சனம் சிறப்பாக பேசப்பட்டது. படம் வந்த சில நாட்களில் (பெரும்பாலும் அதே நாளில்) இப்போதெல்லாம் படங்களை சென்னையில் பார்க்கும் நாம், அந்த காலத்தில் இருந்திருந்தால்? யோசிக்கவே கஷ்டமாக உள்ளது. டாக்டர் ஷிவாகோ படம் உலக அளவில் வந்துசரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் இந்த படம் வெளியானது.
சாமா ஜோக்குகள்:
சுதர்சனம் அவர்களின் ஜோக்குகளை போலவே (சொல்லப்போனால் அவரைவிட) புகழ் பெற்றவை சாமா அவர்களின் ஜோக்குகள். அந்தக் காலத்தில் ஜோக்குகளுக்கு படம் வரைபவரே நகைச்சுவை துணுக்குகளையும் எழுதினர் என்றால் அது சாதாரண விஷயமே. சாமா அவர்களின் ஜோக்குகளையும் கூட கல்கி சிறிது கவனிக்கலாம். ஆனந்தவிகடன் தனது பழைய ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் கொடுக்கும் மரியாதையை கல்கியும் கொடுக்கலாம். தனியாக இவர்களின் ஜோக்கு புத்தகங்களை வெளியிடலாம். கல்கி கவனிக்குமா?
இந்த ஜோக்கில் முதல் படத்தில் இருக்கும் அந்த போட்டோ பிடிப்பவரை சற்று உற்று நோக்குங்கள். நம்ம நடிகர் சோ ராமசாமி போல இல்லை?
விளம்பர கார்னர்:
விளம்பரம் என்றால் பொருட்களுக்கான விளம்பரங்கள் அல்ல. அடுத்து வரப்போகும் தொடர்கள், சிறப்பிதழ்கள், போட்டிகள் போன்றவற்றிற்கான விளம்பரங்கள். கல்கி வரப்போகும் தொடர்களை விளம்பரம் செய்வதில் வல்லவர்கள். குறிப்பாக ஒரு தொடர்கதை வரப்ப்போகிறது என்றால் மூன்று நான்கி புத்தகங்களில் இருந்தே விளம்பரம் செய்வார்கள். அதுவும் இப்போது இருக்கும் இந்த அர்ஜுன் அம்மா யாரு போன்ற டீசர் விளம்பரங்கள் கல்கியில் தான் ஆரம்பித்தன என்றால் அது மிகையாகாது. இதோ ஆம் ஆண்டு வந்த சில விளம்பரங்கள்:
வாசகர்களுக்கான புதிர் கார்னர்:
வாசகர்களுக்கென்றே பலவிதமான புதிர்களும், போட்டிகளும் கல்கியில் சிறந்து விளங்கியது. குறிப்பாக போட்டோ போட்டிகள், வாழ்க்கை குறிப்பு போட்டிகள், பிரபலங்களின் சிறு வயது நினைவு குறிப்பு போட்டிகள் என்று கல்கியே போட்டிகளால் கலை கட்டிய சமயம் அது. அந்த சமயத்தில் வந்த ஒரு பகுதியே யார் தெரியுமா? என்ற போட்டோ போட்டி பகுதி. இந்த பகுதியில் ஒரு போட்டோ இருக்கும். அந்த போட்டோவில் ஒரு பிரபலத்தின் சிறு வயது போட்டோ இருக்கும், அதை வைத்து வாசகர்கள் அந்த பிரபலத்தை கண்டறிய வேண்டும். இந்த போட்டியையே நான் நமது வாசகர்களுக்கும் அளிக்கிறேன்: இந்த யார் தெரியுமா புக்தியில் இருக்கும் மூன்று பிரபலங்கள் யார்? அடுத்து வெள்ளிகிழமை அன்று நான் பதில் அளிக்கும் முன்பே பதிலை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.
ஒரே ஒரு க்ளூ: இந்த மூவரில் ஒருவர் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் உடன் சம்பந்தப்பட்டவர்.
அடுத்த வெள்ளியன்று இந்த புதிர்களுக்கு விடைகளுடன், மற்றும் பிற பொக்கிஷ புதையல்களுடன் உங்களை சந்திக்கிறேன்.
ஃபோட்டோ போட்டியிலுள்ள படங்களை ஏற்கெனெவே பார்த்துள்ளேன்! அந்தச் சிறுமி உண்மையில் சிறுமியல்ல என்றவரை நினைவிருக்கிறது!
ReplyDeleteகிரிக்கெட் விளையாட அமர்ந்திருப்பவர் ஜெமினி கணேசனா?
அல்டிமேட் ஸ்டாருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
மூன்றாவது படத்திலிருப்பவர் இளவயது எலிஸபெத் மகாராணியோ?
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
//கிரிக்கெட் விளையாட அமர்ந்திருப்பவர் ஜெமினி கணேசனா?
ReplyDeleteஅல்டிமேட் ஸ்டாருக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?!!//
காதல் மன்னன் - இதுதான் சம்பந்தம்.
பை தி வே, மீ தி செகண்ட்.
முதல் படத்திலிருப்பது ஒரு வேளை நடிகர் திலகமோ?
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
//காதல் மன்னன் - இதுதான் சம்பந்தம். //
ReplyDeleteஅடடே!
தலைவர்,
அ.கொ.தீ.க.
டாக்டர் ஷிவாகோ (1967) - இதில் இருந்துதான் டாக்டர் சிவா (1975) படம் உருவானதோ?
ReplyDelete//அடுத்து வெள்ளிகிழமை அன்று நான் பதில் அளிக்கும் முன்பே பதிலை சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசு உண்டு.//
ReplyDeleteஅரசர் கொடுக்கும் ஆயிரம் பொற்காசுகளும் அடியேனுக்கே கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும் சொக்கா!
தலைவர்,
அ.கொ.தீ.க.
Me the 3rd
ReplyDelete// இன்றுமுதல் ஒவ்வொரு வாரமும் காமிக்ஸ் காதலனின் பொக்கிஷப் புதையல் என்ற கதம்பம் வெளிவரும். //
Soopper News :))
.
// இதனைப்போலவே ஒவ்வொரு வாரமும் தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள். நான் தொடருகிறேன். //
ReplyDeleteகண்டிப்பாக தொடருங்கள் ;-)
.
அன்புள்ள அருமை நண்பர் அவர்களே!!! மீண்டும் ரத்னா காமிக்ஸ், ரத்ன பாலா வெளியிடப்பட்டால், ஆதரிப்பீர்களா? என்று அதன் முன்னாள் அதிபர் எஸ்.ஜெயசங்கர் கேட்க்கிறார்!! தங்களின் பதில் என்ன? என்பதை கீழ்க்கண்ட முகவரியில் பதிவு செய்யவும்
ReplyDeletehttp://hajatalks.blogspot.com/2010/12/rathna-comics-written-by-haja-ismail.html#comments
பயங்கரவாதி டாக்டர் செவன் said...
மக்களே,
பதிவை இண்ட்லியில் இனைத்துள்ளேன்! உங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற கீழ்காணும் சுட்டியில் சென்று குத்தோ குத்தென்று குத்தவும்!
http://ta.indli.com/seithigal/ரத்னா-காமிக்ஸ்-ஒரு-வரலாறு
தலைவர்,
அ.கொ.தீ.க.
December 24, 2010 2:11 AM
காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இதுநாள் வரையில் எங்கேயும் கமென்ட் போட்டதே கிடையாது. அதற்க்கான நேரம் கிடையாது. இன்றுதான் வாய்ப்பு அமைந்தது. ஆகையால் இதுநாள் வரையில் உங்களின் அறிய சேவைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteமுஸ்தபா, எண்ணூர்.